சன் மியூசிக் நிகழ்ச்சியில் தொகுப்பாளனியாக தனது திரை பயணத்தை தொடங்கியவர் தான் நடிகை காஜல் பசுபதி. இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். முதன் முதலாக வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அடுத்தடுத்து சிங்கம், கோ, மௌனகுரு, இரும்புத்திரை மற்றும் கலகலப்பு 2 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

சினிமாவில் பிஸியாக இருந்த இவர் நடன இயக்குனரான சாண்டியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இந்த விவாகரத்தை தொடர்ந்து சாண்டி வேறொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு இரண்டு குழந்தைகளை பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தனது முன்னாள் கணவரை காஜல் இன்னும் மறக்காமல் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தாலும் அவருடன் நல்ல தோழியாக இன்றும் இருந்து வருகிறார் காஜல். அவர் அளித்த பேட்டியின் போது கூட நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவரை காதலித்து முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டோம் என்று கூறியுள்ளார்.

தற்போது சாண்டி மற்றும் அவரின் மனைவியுடன் நல்ல உறவில் இருந்து வருகிறார் காஜல். தனது முன்னாள் கணவரை பிரிந்தாலும் அவரது நினைவாக கையில் போட்ட டாட்டூவை இன்னும் நீக்காமல் அப்படியே இருக்கிறார். இந்நிலையில் காஜல் பசுபதி தனது முன்னாள் கணவருடன் வாழ்ந்தபோது எடுத்த புகைப்படங்களை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அது மட்டுமல்லாமல் சமீபத்தில் ஷகீலாவின் பேட்டி ஒன்றில் காஜல் சாண்டியின் டாட்டூவை இன்னும் நீக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் அந்த வீடியோவில் விளக்கியுள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.