விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ஒரு நல்ல குடும்பக் கதையாக ரசிகர்கள் மத்தியில் வலம் வருகிறது. தினந்தோறும் தவறாமல் இந்த சீரியலை பார்ப்பதற்கே ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் கோபி என்கிற சதீஷ்குமார்.

குடும்பத்தில் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு மற்றொரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு சென்றவர். தற்போது இவர் நடத்திய நாடகமெல்லாம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிய வர பாக்யா விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார்.

கோபி கதாபாத்திரத்தை ரசிப்பதற்கு தனி ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது என்று கூறலாம். அவர் சீரியலில் கோபியாக நடிக்கிறார் என்பதை மறந்து அவரை பார்வையாளர்கள் பலரும் திட்டி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி சீரியலில் மன்மதனாக வலம் வரும் கோபியின் உண்மையான குடும்பம் குறித்து செய்தி ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதாவது நிஜத்தில் அவருக்கு அழகான மனைவி ஒருவர் உள்ளார். அவரே சீரியலில் தான் அப்படி எனது நிஜ அழகான மனைவி இவர்தான் என்று தனது மனைவியின் புகைப்படத்துடன் கோபி என்கிற சதீஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
