சமந்தாவிற்கு இருக்கும் அந்த பிரச்சனை விஜய் டிவி பிரபலத்திற்கும் இருக்கா?…. அவரே சொன்ன ஷாக் நியூஸ்…. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதனைப் போலவே தொகுப்பாளினி என்று சொன்னவுடன் அனைவர் நினைவிற்கும் வருவது டிடி என்கிற திவ்யதர்ஷினி. தமிழக மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர்.

இவர்கள் இருவருமே திருமணம் முடிந்த விவாகரத்து செய்து தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது ஒரே விதமான நோயால் இருவரும் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகை சமந்தா அண்மைக்காலமாக அடிக்கடி அமெரிக்கா சென்று திரும்புவதால் இவருக்கு ஏதோ மருமநோய் உள்ளது என வதந்திகள் பரவி வந்த நிலையில் அண்மையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு மையோ சிடிஸ் என்ற ஆட்டோ இம்யுன் பிரச்சனை இருப்பதாக தெரிவித்திருந்தார்.

அதே சமயம் அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அவர் விரைவில் குணமடைய வேண்டி பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் டிடி குறித்து அதிர்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. சமந்தாவின் இந்த போஸ்டை பார்த்து டிடி, நாம் எல்லாம் ஆட்டோ இம்யுன் வாரியர்கள்.

நம்மால் இதை வெல்ல முடியும். கமான் ஃபைட். எங்கள் அனைவருக்காகவும் செய்யுங்கள். ஆட்டோ இம்யுன் பிரச்சனையுடன் போராடும் எங்களுக்கு எல்லாம் இன்ஸ்பிரேஷன் ஆக நீங்கள் இருக்கிறீர்கள். எனவே இதையும் நாம் வென்று காட்டுவோம் என டிடி கூடியுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் அக்கா உங்களுக்கு ஆர்தரைட்டை தானே இருக்கு ஆட்டோ இம்யுன் பிரச்சனையுமா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.