ஏழுமலையான் தரிசனம்….. வீட்டில் புரட்டாசி மாத சிறப்பு பூஜை…. வீடியோவை பகிர்ந்த நடிகை சீதா….!!!!

தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் பார்த்திபன்.இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளன. நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட கலைஞராக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் முதல் முதலாக புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் சீதா.முதல் படத்திலேயே பார்த்திபன் மற்றும் சீதா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்தது. கடந்த 1990 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

கிட்டத்தட்ட பத்து வருடங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு இரண்டு பெண்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார். மிக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களின் குடும்ப வாழ்க்கை 2001 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இருவருக்கும் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். அதன் பிறகு சீதா, ரமேஷ் என்ற சீரியல் நடிகரை திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே கொஞ்ச காலமாக சீரியலில் தலை காட்டி வந்த சீதா தற்போது அதிக கவர்ச்சியாக மாறி அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.  இந்நிலையில் நடிகை சீதா தனது வீட்டில் புரட்டாசி மாத பூஜை நடத்திய வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.