“இதை மறக்கவே முடியாது”…. ஐஸ்வர்யா ராய் மகளுக்கு மணிரத்தினம் கொடுத்த பரிசு…. மனம் நெகிழ்ந்த நடிகை….!!!!

உலக அழகியாக கடந்த 1994 ஆம் ஆண்டு தேர்வாகி பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். அதன் பிறகு தமிழ் சினிமாவில் இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றும் பல கோடி சம்பளம் வாங்கும் நடிகையாகவும் வந்தார். இதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு ஆரத்யா பச்சன் என்ற மகளைப் பெற்றெடுத்த ஐஸ்வர்யா சினிமாவில் இருந்து சற்று விலகினார். சில நாட்கள் கழித்து சினிமாவில் மீண்டும் களம் இறங்கினார். தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தின் பிரமோஷன்களில் ஐஸ்வர்யாவும் கலந்து கொண்டு வருகிறார். அப்போது ஒரு பேட்டியில் மணிரத்தினம் தனது மகள் ஆராத்யாவிற்கு வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு பரிசை வழங்கியதாக ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.

அதாவது பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பதே பெரிய அதிர்ஷ்டம் என பிரபலங்கள் இருக்க ஐஸ்வர்யாராயின் மகளுக்கு ஒரு சீன் எடுக்க ஆக்சன் என்று சொல்லும் வாய்ப்பை மணிரத்தினம் கொடுத்துள்ளார். இதனைக் கூறிய ஐஸ்வர்யா ராய் இந்த தருணத்தை என்னுடைய மகள் எப்போதுமே மறக்க மாட்டாள், அது பெரிய பரிசு, மணிரத்தினம் அவர்களுக்கு நன்றி என ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.