முதன்முறையாக வெளியான நடிகர் யோகி பாபுவின் மகன் போட்டோ…. இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ….!!!!

கோலிவுட்டில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. இவர் மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடியாக நடிப்பது மட்டுமல்லாமல் தனியாக படங்களில் ஹீரோவாகவும் நடித்து வருகின்றார். இவருக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று, தற்போது ஒரு மகன் இருக்கிறார். அவரின் மகனின் பெயர் விசாகன்.

இந்நிலையில் நேற்று யோகி பாபுவுக்கு பிறந்தநாள் என்பதால் அதனை வீட்டில் கொண்டாடியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் நடிகை சஞ்சனா சிங் கலந்து கொண்டார்.

அப்போது யோகி பாபு மகனுடன் தான் எடுத்துக் கொண்ட வீடியோவை சஞ்சனா வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.