தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்திக் மகனான கௌதம் கார்த்திக். இவர் முதன்முதலாக கடல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து என்னமோ ஏதோ, முத்துராமலிங்கம் மற்றும் தேவராட்டம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 10 தல திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதனிடையே தேவராட்டம் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியது. இருவரும் அப்படத்தில் ஒன்றாக இணைந்து பணியாற்றியதன் மூலம் காதல் மலர்ந்துள்ளது. இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்து விட்டதால் விரைவில் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் அண்மையில் கௌதம் கார்த்திக் பிறந்த நாளுக்கு மஞ்சுமா மோகன் வாழ்த்து தெரிவித்து காதல் குறியீட்டை பயன்படுத்தினார். அதற்கு நன்றி தெரிவித்து கௌதம் மோகன் காதல் குறியீட்டை பகிர்ந்து கொண்டார்.இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமீபத்தில் இணையத்தில் தகவல் வெளியான நிலையில் தற்போது இவர்கள் காதல் குறியீட்டை பயன்படுத்தி இருப்பது அதனை உறுதிப்படுத்தியுள்ளது
Happy birthday to my favorite human❤️@Gautham_Karthik pic.twitter.com/sHYtA9IDVc
— Manjima Mohan (@mohan_manjima) September 12, 2022
.