தமிழ் சினிமாவில் வைகைப்புயல் வடிவேலுவுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகர் முத்துக்காளை. அதிலும் குறிப்பாக என் புருஷன் குழந்தை மாதிரி என்ற திரைப்படத்தில் செத்து செத்து விளையாடுவோமா என்று இவர் பேசும் டயலாக் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.

இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து இதுவரை ஏராளமான திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் மறைந்த நடிகர் விவேக் குறித்து பேசி உள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், நடிகர் விவேக் நகைச்சுவை நடிகர்களுக்கும் அவர்களின் குழந்தைகளின் படிப்பு செலவிற்கும் நிறைய உதவி செய்துள்ளார்.

அவர் ஒரு மாமனிதர். அவர் செய்துள்ள உதவிகள் ஏராளம். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அவர் புத்தகங்கள் அதிகம் படிப்பதால் காமெடி ஐடியாக்கள் நிறைய வரும். ஆனால் நடிகர் வடிவேலு இதுவரை அப்படி எந்த உதவியும் செய்யவில்லை என்று நடிகர் முத்துக்காளை அளித்துள்ள பேட்டி கோலிவுட்டில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
