நடிப்பை நிறுத்திய பிரபல தமிழ் நடிகை…. அதற்கு காரணம் நடிகை வனிதா தான்…. அவரே சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இந்த நிகழ்ச்சிகள் ஒரு பக்கம் வரவேற்பை பெற்றாலும் மறுபக்கம் சில விமர்சனங்களையும் சந்தித்தது. அது மட்டுமல்லாமல் லஷ்மி ராமகிருஷ்ணன் பல்வேறு திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

இவர் இயக்கிய ஹவுஸ் ஓனர் திரைப்படம் முக்கிய விவாதங்களை எழுப்பியது. அதாவது இவர் மேல் தட்டு வருக அரசியலை தூக்கி பிடிக்கிறார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.இதனிடையே இவர் தற்போது புதிதாக ஒரு படம் இயக்க உள்ளார். அந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்க உள்ளார்.

இருந்தாலும் தற்போது சில வருடங்களாக லட்சுமி ராமகிருஷ்ணன் எந்த ஒரு படத்திலும் நடிப்பதில்லை. அதற்கான காரணத்தை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரே வெளிப்படையாக கூறியுள்ளார். அதாவது வனிதா பீட்டர் பால் திருமணம் சர்ச்சையான போது நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் சில கருத்துக்களை கூறினார்.

அப்போது யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் லைவில் வந்த வனிதா மிகவும் மரியாதை குறைவாக அவரை பேசினார்.அதனை தற்போது நினைத்துப் பார்த்தாலும் அருவருப்பாக இருக்கிறது என்றும் ஏன்டா நடிக்க வந்தோம் என இருந்தது என கூறிய லட்சுமி ராமகிருஷ்ணன், அதற்குப் பிறகுதான் படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.