அம்மாடியோ இரண்டே நாட்களில்…. தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?…. வசூல் வேட்டையில் வெந்து தணிந்தது காடு…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. அவரின் நடிப்பில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா திரைப்படங்களை தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு தற்போது மூன்றாவது முறையாக நடித்துள்ள படம் வெந்து  தணிந்தது காடு. இந்த திரைப்படத்தில் முத்து என்ற கேரக்டரில் சிம்பு நடித்துள்ளார்.

இப்படத்தின் போஸ்டர்,பாடல்கள் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இதில் சிம்பு கிராமம் மற்றும் நகரம் என இரு வேறு கெட்டப்பில் நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். குஜராத் நடிகை சித்தி இட்னானி கதாநாயகியாக நடித்துள்ளார். ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் முதல் ஷோவில் இருந்து அமோக வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் அறிமுக நாயகி சித்தி இத்னானி,ராதிகா சரத்குமார் மற்றும் அப்புகுட்டி உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்த அசத்தியுள்ளனர். இந்நிலையில் முதல் நாளிலிருந்து வசூல் வேட்டையாடி வரும் வெந்து தணிந்தது  காடு திரைப்படம் இரண்டாம் நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே 16 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.