மதுரையில் நடிகர் சிம்புவின் ரசிகர்கள் அவருக்கு 1000 அடியில் பேனர் வைத்து மதுரையையே அசத்தியுள்ளனர். ஆரம்பத்தில் சினிமாவில் உச்சத்தில் இருந்த சிம்பு இடையில் உடல் பருமன் அதிகரித்ததன் காரணமாக பல படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு தீவிரமாக உடற்பயிற்சி செய்து பிட்டாக மாறி மாஸ் என்று கொடுத்தார். இதனைத் தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்தார்.

அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது. தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தலை படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் இணைகிறார். அதனால் மீண்டும் தனது மார்க்கெட்டை அதிவேகமாக பிடித்து வருகிறார் நடிகர் சிம்பு.

அவருக்கு ஆதரவாக ரசிகர்கள் அனைவரும் செயல்பட்டு வருகிறார்கள். தற்போது அதனை நிரூபிக்கும் விதமாக சிம்புவின் தீவிர மதுரை ரசிகர்கள் அவருக்கு ஆயிரம் அடியில் பேனர் வைத்து அசத்தியுள்ளனர். மதுரையின் ஒரு பாலத்தில் அந்த பேனர் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் அதிர வைத்துள்ளது.
1000 Feet Banner For #Atman #SilambarasanTR in Madurai????pic.twitter.com/ARdtya4ghR
— Tamil Murugan (@TamilMurugan8) July 18, 2022