என்னை ஏமாத்தீட்டாங்க….. கண்ணீர் விட்டு கதறி அழுத பிக்பாஸ் புகழ் ஜூலி…. காரணம் என்ன….????

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் அறிமுகமானவர் ஜூலி. இவர் முதலில் சென்னைமெரினாவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்து கொண்டார். அதன் மூலம்தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் பல நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்றார்.

இருந்தாலும் தற்போது சின்னத்திரையில் தொகுப்பாளராக வலம் வருகிறார். அதனைப் போலவே சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தற்போது ஜூலிக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் போட்டோ ஷூட் களில் அவர் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பிரபல நிறுவனத்திடம் மூன்று லட்சம் ரூபாய் ஏமாந்து விட்டேன் என்று ஜூலி கூறியுள்ள தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற நடன நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜூலி, நான் லண்டனில் நர்ஸ் வேலைக்காக மும்பை ஏஜென்சி நிறுவனத்திடம் 3 லட்சம் ரூபாய் பணம் கட்டிருந்தேன்.

அந்த பணமும் நான் கஷ்டப்பட்டு நர்ஸ் வேலை செய்ததன் மூலம் சேர்த்தது. பின்னர் திடீரென ஒரு நாள் நான் பணம் கட்டிய மும்பை ஏஜென்சி நிறுவனம் என்னை ஏமாற்றிவிட்டதாக தகவல் வந்தது. எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது.  எனது குடும்பம் தான் ஆறுதலாக இருந்தார்கள் என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.