ரசிகர்களுக்கு திடீரென சர்ப்ரைஸ் கொடுத்த சியான் விக்ரம்…. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…. படு வைரல்…..!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர்தான் நடிகர் விக்ரம். இவரை ரசிகர்கள் அனைவரும் அன்போடு சியான் என்று தான் அழைப்பார்கள். அவர் என் நடிப்பில் தற்போது கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய திரைப்படங்கள் உருவாகியுள்ளன.

இந்த படங்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றன. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல்,விஜய் மற்றும் சிம்பு உள்ளிட்ட பெரும்பாலான திரை பிரபலங்கள் ட்விட்டரை பயன்படுத்தி அதில் எப்போதும் ஆக்டிவாக உள்ளனர்.

இந்நிலையில் நடிகர் விக்ரம் சமூக வலைத்தளமான ட்விட்டரில் நேற்று இணைந்துள்ளார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக நீல வண்ண டிக் கொடுத்துள்ள நிலையில் அவரை நெட்டிசன்கள் மல மல என பின்தொடர்ந்து வருகிறார்கள்.

மேலும் தனது படங்கள் குறித்து அப்டேட்டுகளை வெளியிடவும் வதந்திகளுக்கு பதிலளிப்பதற்காகவும் ட்விட்டர் கணக்கை அவர் தொடங்கியுள்ளதாக வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்து வருகிறார்கள்.