Degree, B.E, B.Tech பட்டதாரிகளுக்கு…. மாதம் ரூ.55,000 சம்பளத்தில்…. BEL நிறுவனத்தில் வேலை….!!!!!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் 60 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்கள் அனைத்தும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளன.

பணி: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Trainee engineer, Project engineer பணியிடங்கள் காலியாக உள்ளது.

காலி பணியிடங்கள்: 70

கல்வித் தகுதி: பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப் பிரிவில் B.Sc, B.E அல்லது B.Tech டிகிரி முடித்திருக்க வேண்டும்

வயதுவரம்பு: 32 வயதுக்குள் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்

சம்பளம்:

  • Trainee Engineer – I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.30,000 முதல் அதிகபட்சம் ரூ.40,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • Project Engineer – I பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000 முதல் அதிகபட்சம் ரூ.55,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்

விண்ணப்பிக்கும் கடைசி தேதி; இதில் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.bel-india.in-க்கு செல்லவும்.