“நண்பர்களே கை விட்றாதீங்க”….. உயிருக்கு போராடும் பிரபல நடிகர்…. கண் கலங்கி வீடியோ வெளியிட்ட நடிகர் பெஞ்சமின்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்தவர் தான் போண்டாமணி.இலங்கையை பூர்விகமாகக் கொண்ட இவர் 1980களில் சிங்கப்பூரில் பணிபுரிந்த போது ஒரு நிகழ்ச்சிக்காக சென்று இருந்தால் இயக்குனர் பாக்கியராஜ் உடன் பழக்கம் ஏற்பட்டது . அதன் பிறகு சென்னை வந்த இவர் பாக்கியராஜின் பவுனு பவுனுதான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

முன்னணி காமெடி நடிகர்களான கவுண்டமணி, வடிவேலு மற்றும் விவேக் உடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். அதாவது படிக்காதவன்,மருதமலை மற்றும் வேலாயுதம் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்துள்ளார் .சினிமா ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் அதிமுகவின் தொண்டராகவும் இருக்கும் போண்டாமணி தற்போது இரண்டு கிட்னிகளும் செயலிழந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவியில் இருப்பதாக நடிகர் பெஞ்சமின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் .

அந்த வீடியோவில் உயிருக்கு போராடும் நிலையில் இருக்கும் போண்டாமணிக்கு உதவ யாராவது முன் வரவேண்டும் என கண்ணீர் மல்க அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.