படையப்பா படத்தில் நடித்த குழந்தையா இது?…. இப்போ பிரபல சீரியல் நடிகை…. ரஜினிக்கே ஜோடி போடுவாங்க போலயே….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரஜினி நடிப்பில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் படையப்பா. இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதில் ரஜினி, சௌந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் நடித்துள்ளனர். வில்லியாக ரம்யா கிருஷ்ணன் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற படையப்பா திரைப்படம் ரஜினியின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமாக காணப்படுகிறது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு கே எஸ் ரவிக்குமார் மற்றும் ரஜினி இருவரும் நெருங்கிய நண்பர்களாக மாறிவிட்டனர். அதன் பிறகு கே எஸ் ரவிக்குமார் ரஜினியை வைத்து லிங்கா படத்தை இயக்கினார். அந்தத் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கே வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் படையப்பா திரைப்படத்தில் என் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா என்ற பாடலில் இடம்பெற்ற ஹேமா பிந்து என்ற குழந்தைதான் தற்போது இதயத்தை திருடாதே சீரியலில் கதாநாயகியாக நடித்து வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.அதாவது படத்தில் பாசமுள்ள குழந்தையப்பா என்ற பாடலில் வரும் போது ஒரு சிறு குழந்தையின் முகம் படத்தில் இடம்பெறும்.

தற்போது அந்த சின்ன குழந்தை தான் பிரபல சீரியல் நடிகையாக வளர்ந்துள்ளார்.அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரஜினியின் படத்தில் சிறு குழந்தையாக நடித்த இவர் தற்போது ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகையாக வளர்ந்துள்ளார என்ற ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்துடன் புகைப்படத்தை இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.