
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். அதில் ஆறாவது சீசன் அண்மையில் தொடங்கிய நிலையில் அந்த சீசனில் மக்களின் நம்பிக்கையான போட்டியாளராக கொண்டாடப்பட்டவர் ஜி பி முத்து.டிக் டாக் மூலம் பிரபலமான இவர் அப்படியே ஒரு யூடியூப் பக்கமும் திறந்து அதிலும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
அதன் மூலமாக பிரபலமான இவருக்கு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இவர் உள்ளே நுழைந்தவுடன் ஏராளமான ரசிகர்கள் இவருக்கு உருவாகினர். இவர் இறுதி வரை வருவார் என எதிர்பார்த்த நிலையில் 14 நாட்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்தார்.அதன் பிறகு எனக்கு பணம் புகழ் எதுவும் தேவையில்லை தான் முக்கியம் என கூறிவிட்டு வெளியேறிவிட்டார்.
வீட்டிற்கு சென்றவுடன் மருத்துவமனையில் இருக்கும் தனது மகனின் புகைப்படத்தை அவர் வெளியிட்ட பிறகு அனைவருடன் அமர்ந்து பிரியாணி சாப்பிடும் வீடியோவையும் வெளியிட்டார். தற்போது ஜி பி முத்து அடுத்ததாக சன்னிலியோனுடன் இணைந்து OMG என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அடுத்ததாக அஜித் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு வந்திருப்பதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் ஜி பி முத்து தெரிவித்துள்ளார். அஜித் படத்தில் ஜிபி முத்து டாப்பிங் தான் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகின்றது.