![nayanthara 4'__ (73)](https://tamilanmedia.in/wp-content/uploads/2022/11/nayanthara-4__-73-678x381.jpg)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர்தான் நடிகர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். ரசிகர்களால் உலகநாயகன் என்று அறியப்படுபவர்.இவர் தசாவதாரம் திரைப்படத்தின் 9 கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். பல வருடங்களுக்குப் பிறகு உண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.
அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது.இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். அதே சமயம் தற்போது இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்திய 2 திரைப்படத்தின் நடித்து வருகின்றார்.
இதனைத் தொடர்ந்து கமலின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அப்டேட் வந்தபடி உள்ளது. இந்நிலையில் நேற்று அவரின் பிறந்தநாள் என்பதால் அவரின் திரைப்படங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகிறது. அதன்படி மீண்டும் மணிரத்னம் மற்றும் கமல் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் குறித்து அறிவிப்பும் வெளியானது.
இதனிடையே கமலின் பிறந்தநாளை முன்னிட்டு பல திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் இயக்குனர் மோகன் ராஜாவும் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவருடன் சிறுவயதில் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Happy birthday to our eternal pride @ikamalhaasan sir
Admiring you has been one of the best part of my life always pic.twitter.com/8JQW0xwH1g— Mohan Raja (@jayam_mohanraja) November 7, 2022