தமிழ் சினிமாவில் இன்று முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் வெண்ணிலா கபடி குழு படத்தில் பரோட்டா காமெடியில் நடித்ததன் மூலம் பரோட்டா சூரி என்று பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அதன் பிறகு சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித் மற்றும் விஜய் உள்ளிட்ட பல நடிகர்களுடன் நடித்து வருகிறார். இதுவரை பல்வேறு காமெடி படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் தற்போது ஹீரோவாகவும் அவதாரம் இருக்கிறார்.

அதாவது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அப்படத்தில் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. அது ஒரு பக்கம் இருக்கிற மறுபக்கம் முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி ரோல்களில் நடித்து வருகின்றார். அண்மையில் வெளியான விருமன் திரைப்படத்திலும் இவர் காமெடியனாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நாடு முழுவதும் இன்று 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு சினிமா நட்சத்திரங்கள் பலரும் அவரவர் வீடுகளில் கொடியேற்றி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அவ்வகையில் இன்று நடிகர் சூரி அவரது அப்பார்ட்மெண்டில் தேசியக்கொடியை ஏற்றியுள்ளார்.

தனது வீட்டில் தேசியக்கொடி ஏற்றிய புகைப்படத்தை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ள நிலையில் ரசிகர்கள் பலரும் அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள். ஏனென்றால் அவர் செய்த சம்பவமே வேறு. அதாவதுசூரி வீடு துடைக்க பயன்படுத்தப்படும் மாப் குச்சியில் தேசியக் கொடியை கட்டி பறக்க விட்டுள்ளார். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
