சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெற்றோரை பார்த்துள்ளீர்களா?…. அதுவும் ரஜினியின் தந்தை ஒரு கான்ஸ்டபிள்….. பலருக்கும் தெரியாத உண்மை….!!!!

தனது நடிப்பால் ஆறிலிருந்து அறுபது வரை அனைவரையும் கட்டி போட்டவர். சர்வதேச அளவில் தமிழ் சினிமாவை கொண்டு சென்ற புகழ் நடிகர் ரஜினிக்கு அதிகமாகவே இருக்கின்றது. இவரின் இந்த ராஜாங்கம் தமிழ் சினிமா உலகில் 47 வருடங்களாக கொஞ்சம் கூட குறையாமல் அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. சில படங்கள் வெற்றி தோல்விகளை சந்தித்தாலும் இந்த வயதிலும் எனர்ஜி குறையாமல் அப்படியே இருக்கிறார் ரஜினி.

தற்போது இயக்குனர் நெல்சன் திலிக்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் தமன்னா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கியது. இந்த அறிவிப்பை பஸ்ட் லுக் உடன் இணைந்து வெளியீட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தனர். இதனிடையே நடிகர், நடிகைகள் குறித்து பலரும் அறியாத சில தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரஜினி குறித்த ஒரு தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது ரஜினிகாந்த் கர்நாடகாவில் ராமோஜி ராவ், ஜிஜா பாய் தம்பதிக்கு பிறந்தவர். ரஜினியின் தந்தை ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். ரஜினியின் தாய் தந்தை புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.