இளைஞர்களின் கிளாமர் குயின்ஸ்…. பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் களமிறங்கும் பிரபல நடிகைகள்…. ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்….!!!!

விஜய் டிவியில் விரைவில் ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 6- இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம்.

அவ்வளவு விறுவிறுப்பான நிகழ்ச்சி இது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் சர்ச்சையில் சிக்குவதை ரசிப்பதற்கு ஒரு பெரிய கூட்டம் உள்ளது என்றால் மறுபக்கம் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்கு ஒரு பெரிய பட்டாளமும் உள்ளது. தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில் விரைவில் சீசன் ஆறு ஆரம்பமாக உள்ளது. ‘

இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு கிட்டத்தட்ட இன்னும் 40 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது அதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

ஏற்கனவே ரக்சன், ராஜலட்சுமி, ஸ்ரீநிதி, அஜ்மல் மற்றும் கார்த்திக் குமார் உள்ளிட்டோர் பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது மேலும் இரண்டு நடிகைகள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு இளைஞர்களை தன் பக்கம் வைத்திருக்கும் நடிகைகள் தர்ஷா குப்தா மற்றும் ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளராக கலந்து கொள்ள உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி உள்ளது.