செம ஃபிட்டான உடையில் போட்டோ வெளியிட்ட தொகுப்பாளினி ரம்யா…. லைக்குகளை குவிக்கும் ரசிகர்கள்….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் டிடிக்கு பிறகு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் ரம்யா.இவருக்கு பின்னர் தான் பாவனா மற்றும் பிரியங்கா என அடுத்தடுத்த தொகுப்பாளினிகள் விஜய் டிவியில் இடம் பிடித்தனர்.டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர் தான் தொகுப்பாளினி ரம்யா.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, நம்ம வீட்டு கல்யாணம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். அதேசமயம் பல கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை வெளியீட்டு விழா என பல விழாக்களிலும் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான மொழி திரைப்படத்தில் ரம்யா துணை கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியிருந்தார்.

அதன் பிறகு ஓ காதல் கண்மணி, மங்காத்தா,மாசு என்கிற மாசிலாமணி மற்றும் வனமகன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தார்.அதே சமயம் இளைய தளபதியின் மாஸ்டர் திரைப்படத்திலும் நடித்த அசத்தியிருந்தார்.இவர் சினிமாவை தாண்டி பளுதூக்கும் போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அடிக்கடி உடல் பயிற்சி குறித்த பல தகவல்களை இணையத்தில் பகிர்ந்த வண்ணம் இருப்பார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Ramya Subramanian இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@ramyasub)

இந்நிலையில் அவரின் தற்போதைய இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் மிகவும் ஹிட்டான உடற்பயிற்சி உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.