அது எப்படி சாத்தியம்?…. இரண்டே வாரத்தில் 18 கிலோ எடையை குறைத்த ஜெயம் ரவி…. அவர் சொன்ன சீக்ரெட் இதுதான்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ஜெயம் ரவி. இவர் தனது தந்தையின் தயாரிப்பிலும் சகோதரர் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

ரவி நடித்த முதல் திரைப்படமே மக்கள் மத்தியில் பிரபலமானதால் அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவி என்று அழைக்கப்படுகிறார். தற்போது இவர் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வருகின்றார் . இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பூமி. விவசாய பிரச்சனையை மையமாகக் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடித்து வருகின்றார். மேலும் அகிலன்,JR 30, இறைவன் உள்ளிட்ட திரைப்படத்திலும் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் கோமாளி. இந்தத் திரைப்படத்தில் காஜல் அகர்வால் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் ஜெயம் ரவியுடன் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது . மேலும் அப்படத்தில் ஜெயம் ரவி பள்ளி பருவம் மாணவன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதனிடையே பள்ளி பருவ கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஜெயம் ரவி இரண்டே வாரத்தில் 18 கிலோ எடையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அவர் எடையை குறைத்ததற்கான ரகசியத்தை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

அதாவது எடையை குறைக்க இரண்டு வாரத்திற்கு கேரட் மட்டும் தக்காளியை மட்டுமே சாப்பிட்டதாகவும், ஏதாவது பிளாக் காபி வைத்ததாகவும் கூறியுள்ளார். இதன் மூலமாக அவர் இரண்டே வாரத்தில் 18 கிலோ உடல் எடையை குறைத்ததாகவும் இதை சரியான வழிகாட்டுதல் இல்லாமல் வேறு யாரும் செய்ய வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.