சினிமாவில் நடிக்க வந்து பலரும் இன்று youtube சேனல்கள் தொடங்கி அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள். யூடியூப் மூலமாக தங்களின் திறமையை வெளிப்படுத்தி பிரபலமானவர்கள் பலரும் உள்ளனர். அந்த வரிசையில் யூடியூப் வெப் சீரிஸ் ஒன்றில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் தீபா பாலு. இவர் ஆல்பம் பாடல்கள் மற்றும் வெப் சீரிஸ் போன்றவற்றில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இவர் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் எப்போது போஸ்ட் போடுவார் என்று அனைவரும் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள்.இன்ஸ்டாகிராமில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். இதனிடையே இவர் தற்கொலை செய்து கொண்டதாக சில தகவல்கள் இணையத்தில் பரவின.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உடனே அவரை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த தீபா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் தான் நலமாக இருப்பதாகவும் வீண் வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று கூறியும் விளக்கம் அளித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சில நாட்களுக்கு முன்பு கூட இறந்த துணை நடிகைக்கு பதிலாக தவறுதலாக இவரின் பெயரில் சிலர் தவறான செய்திகளை வெளியிட்ட குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் வீடியோ மூலமாக இவர் தெளிவுபடுத்தினார். தற்போது இவர் தற்கொலை செய்து கொண்டதாக இணையத்தில் வெளியான தகவல் பெறும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
