ரம்யா கிருஷ்ணனின் அம்மாவை துப்பாக்கியால் சுட்ட பிரபல இயக்குனர்…. இணையத்தில் தீயாய் பரவும் செய்தி….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் ரம்யா கிருஷ்ணன். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.இவர் தற்போது ரஜினியின் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நடிகை ரம்யா கிருஷ்ணனின் தாயார் குறித்து ஒரு தகவல் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. அதாவது ரம்யா கிருஷ்ணனின் தாயார் மாயாவை பிரபல இயக்குனரான கே எஸ் ரவிக்குமார் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் குறித்து பல நாட்களாக தகவல் வெளியாகி வருகிறது.

நடிகர் நாகேஷ் இயக்கத்தில் 1985 ஆம் ஆண்டு பார்த்த ஞாபகம் இல்லையா என்ற திரைப்படம் உருவானது. அந்தத் திரைப்படத்தில் ஆனந்த் பாபு மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் கே எஸ் ரவிக்குமார் துணை இயக்குனராக பணியாற்றினார். இதனிடையே படத்தின் ஒத்திகை நாகேஷ் வீட்டில் நடைபெற்று வந்தது.

அப்போது நாகேஷின் இளைய மகளுடன் கே எஸ் ரவிக்குமார் பொம்மை துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு அதில் ஈயத்தால் செய்த புல்லட்டை வைத்து சுட்டு விளையாட்டு கொண்டிருந்தார்.அந்த சமயத்தில் ரம்யா கிருஷ்ணனின் தாயார் தனது கையை சரியாக குறி வைத்து சுடும்படி கூறிய நிலையில் கே எஸ் ரவிக்குமாரும் துப்பாக்கியால் சுட்டார். ஆனால் எதிர்பாராத விதமாக ரம்யா கிருஷ்ணனின் தாயார் தோள்பட்டையில் அந்த குண்டு துளைத்தது.

இதனை கண்டு பதறிப்போன ஆனந்த் பாபு உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அறுவை சிகிச்சை செய்து அந்த புல்லட்டை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். அந்த சம்பவம் தற்போது இணையத்தில் திடீரென வைரலாகி வருகிறது. பின்னர் கே எஸ் ரவிக்குமார் வீட்டிற்கு போலீசார் சென்ற நிலையில் உடனே அவர் பயந்துவிட்டார்.

அதன் பிறகு போலீசார், ரம்யா கிருஷ்ணனின் தாயார் கொடுத்துள்ள மனுவில் இது விளையாட்டாக நடந்தது என்று குறிப்பிட்டுள்ளார் என போலீசார் தெரிவித்தனர். அதனால் கே எஸ் ரவிக்குமார் சற்று நிம்மதி அடைந்தார். இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் ரஜினி மற்றும் ரம்யா கிருஷ்ணனை வைத்து படையப்பா என்ற மாபெரும் வெற்றி திரைப்படத்தை எடுத்தது குறிப்பிடத்தக்கது.