தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அம்மு அபிராமி. இவர் ராட்சசன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மூன்றாம் இடத்தை தட்டி சென்றார். தற்போது உலகநாதன் சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாக உள்ள குதூகலம் திரைப்படத்தில் கதாநாயகனாக பாலமுருகன் அறிமுகமாகிறார்.

இவருக்கு ஜோடியாக நடிக்க அம்மு அபிராமி கமிட்டாகி உள்ளாராம். இந்நிலையில் நடிகை அம்மு அபிராமி தனது திருமணம் குறித்து இன்ஸ்டால் பதிவிட்டுள்ளார். அம்மு அபிராமி இடம் ரசிகர் ஒருவர் உங்களுக்கு திருமணம் எப்போது என சமூக வலைத்தள மூலம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த அவர், எனக்கு 22 வயது தான் ஆகிறது.இந்த வயதில் திருமணம் செய்வதைவிட எனக்கு பல இலக்குகள் இருக்கின்றன.திருமணம் செய்து கொள்ள சரியான நேரம் வரும்போது உங்களுக்கு கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.