இந்தியாவின் NO- 1 நடிகர்….. மீண்டும் முதலிடத்தை தட்டி தூக்கிய விஜய்…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய சினிமா என்றாலே தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகள் அனைத்தும் அடங்கும். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் என பலரும் இருந்து வருகிறார்கள். இந்நிலையில் ஆர்மேக்ஸ்  மீடியா என்ற நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் டாப் 10 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் தேசிய அளவில் மிக பிரபலமான நடிகர் என்ற பெருமையை விஜய் பிடித்துள்ளார். மற்ற நடிகர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். ஆர்மேக்ஸ் மீடியா வெளியிட்டுள்ள ஜூலை மாதத்திற்கான மிகவும் பிரபலமான தமிழ் நடிகர் பட்டியலில் நடிகர் விஜய் முதலிடம் பிடித்துள்ளார்.

அவரை அடுத்து இரண்டாவது இடத்தில் அஜித், மூன்றாவதாக சூர்யா, நான்காவது விஜய் சேதுபதி, ஐந்தாவது கமல்ஹாசன், ஆறாவது சிவகார்த்திகேயன், ஏழாவது ரஜினிகாந்த், எட்டாவது விக்ரம், ஒன்பதாவது இடத்தில் தனுஷ் மற்றும் பத்தாவது இடத்தில் கார்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஏற்கனவே கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் வெளியிடப்பட்ட பட்டியலில் நடிகர் விஜய் முதலிடம் பெற்ற நிலையில் தற்போது அதே இடத்தை தக்கவைத்துக் கொண்டு அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளதால் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.