“திருமணத்திற்கு நான் ரெடி, ஆனா அமீர் தான்”….. முதல்முறையாக Marriage பிளான் குறித்து பேசிய பாவனி…. வைரல் வீடியோ…..!!!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் தான் பாவனி மற்றும் அமீர். விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியல் இன் மூலம் அறிமுகமானவர் பாவனி. பின்பு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் வைல் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே வந்தவர் அமீர். அதன் பிறகு அவர் பாவனியிடம் நெருக்கமாக பழகியதால் இருவரும் காதலிக்கிறார்கள் என்று பலரும் கூறி வந்தனர். பிக் பாஸ் முடிந்த பிறகும் கூட இருவரும் வெளியிடங்களில் ஒன்றாக தான் சுற்றி வருகிறார்கள்.

அண்மையில் விஜய் டிவியில் தொடங்கப்பட்ட பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளர்களாக கலந்து கொண்டு அசத்தினர்.அதில் பல்வேறு வேடங்களை அணிந்து நடனமாடி வந்த இவர்கள் ஒரு கட்டத்தில் காதல் ப்ரபோஸ் செய்வது மற்றும் அதையும் தாண்டி திருமணம் செய்து கொள்வது போன்ற புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.

விஜய் டிவியில் தற்போது காதல் புறாக்களாக பலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.இதனிடையே பாவனி  அமீரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வெளியாகி வரும் தகவலை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரின் வருங்காலம் நன்றாக அமைய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் திருமணம் குறித்து அமீர்- பாவனி பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.