பெரிய ஆள்னா என்ன?…. மீண்டும் தனுஷை வம்பிழுத்த சிம்பு…. இணையத்தில் வெடித்த மோதல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் அவரின் அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.வகையில் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் நடிகர் சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தற்போது இருக்கும் நடிகர்கள் பலரும் பெரிய அளவில் ஹிட் கொடுக்கும் வகையில் ஓடி கொண்டு இருப்பதாகவும்,தன்னுடைய வேலைகளை மட்டும் சிறப்பாக செய்தாலே உயர்ந்து விடலாம் எனவும் சிம்பு கூறியுள்ளார்.

நான் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்தால் ஒரு நடிகனாகி விடுவேன், பின் அடுத்து என்ன?, இப்போதைய நடிகர்கள் பெரிய ஆள் என்று ஓடிக்கொண்டிருக்கிறார்கள், ஆனால் பெரிய ஆள் என்றால் எனக்கு என்னவென்று தெரியவில்லை என்று பேசியுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் சிம்பு நடிகர் தனுஷை தான் சீண்டி பேசுகிறார் என்று பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.