“எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு”…. கதறி அழுத பிக்பாஸ் விக்ரமன்…. கண் கலங்கிய பெற்றோர்…. வைரல் பேட்டி….!!!!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ். இதில் ஆறாவது சீசன் தற்போது சூடு பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த சீசன் உடன் ஒப்பிடுகையில் இந்த சீசன் முதல் நாளிலிருந்து மிகவும் விறுவிறுப்பு குறையாமல் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் மக்களுக்கு முகம் தெரியாத பல புது முகங்கள் போட்டியாளராக களமிறங்கியுள்ளனர்.

அதிலும் ரசிகர்கள் எதிர்பார்ப்பவர்கள் தான் ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த ஜிபி முத்து தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார். பிறகு முதல் எலிமினேஷனில் சாந்தி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.அவரைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் வீட்டில் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு ரசிகர்களை முகம் சுளிக்க வைத்த அசல் கோளாறு வெளியேறினார்.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள முக்கிய பிரபலம் தான் விக்ரமன் விசிக மாநில செய்தி தொடர்பாளர் ஆன இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதன் முறையாக அரசியல் தொகுப்பாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலியை சேர்ந்த இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.விஜய் டிவியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்தவர்.

நடிகர் சரத்குமாரின் நிறுவனம் இந்த சீரியலை தயாரித்தது.முழுக்க முழுக்க காதல் கதையை மையமாகக் கொண்ட இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் விக்ரம் என்னுடன் இணைந்து மதுமிலா நடித்து இருந்தால். ஆரம்பத்தில் இந்த சீரியல் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில் வெறும் 29 எபிசோடுகள் மட்டுமே ஒளிபரப்பானது.

பின்னர் இந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது.அதன் பிறகு தான் விக்ரமன் விசிக மாநில செய்தி வாசிப்பாளராக களம் இறங்கினார். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் விக்ரமன் தயார் தனது மகன் பற்றி பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.