ஏர்போட்டில் கட்டிப்பிடித்து செல்பி எடுத்த கீர்த்தி சுரேஷ்…. யாருடன் தெரியுமா?…. வைரலாகும் புகைப்படம்….!!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது. தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.தமிழ் மட்டுமல்லாமல் பழமொழி திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் தற்போது கமிட்டாகி உள்ளார். இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி சுரேஷ் அப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.

சமீபத்தில் ஹைதராபாத் ஏர்போர்ட்டுக்கு கீர்த்தி சுரேஷ் சென்ற நிலையில் அங்கு பிரபல பாலிவுட் நடிகையான ஜான்வி கபூரை பார்த்து கட்டிப்பிடித்து அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.