“என்கிட்ட இது வேண்டாம்”…. பிக்பாஸ் வீட்டில் ஜனனி மீது கை வைத்த அசல்…. ஒரே லுக்கில் அத்தனையும் ஆப்….. வைரலாகும் வீடியோ….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.இதில் முதலில் 20 போட்டியாளர்கள் களமிறங்கிய நிலையில் பின்னர் புதிய போட்டியாளராக மைனா நந்தினி வீட்டில் நுழைந்தார். தினந்தோறும் புதுவிதமான சண்டைகளுடன் பிக் பாஸ் நிகழ்ச்சியை பரபரப்பாக இருந்த நிலையில் கடந்த வாரம் ஜி பி முத்து மற்றும் சாந்தி மாஸ்டர் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தற்போது 19 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் பெண்களிடம் அசல் கோளாறு நடந்து கொள்ளும் விதம் பார்வையாளர்கள் மத்தியில் முகம் சுளிக்க வைத்துள்ளது. மகேஸ்வரி, ஜனனி,நிவாசினி மற்றும் குயின்சி என தொடர்ந்து பல பெண்களிடம் மோசமான வகையில் அவர் நடந்து கொள்கிறார்.

இதனால் சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை ரசிகர்கள் தெரிவித்து வரும் நிலையில் அசல் கோளாறு மற்றும் நிவாஸினி இருவரும் காதலித்து வருவதாக ஒரு கிசுகிசு தற்போது எழுந்துள்ளது. அதற்கு ஏற்றது போல இருவரும் நெருக்கமாக பழகி வருகின்றன.இதனால் அசலின் செயல் பிடிக்காமல் அவரை பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர் நேற்று ஜனனி மீது கை போட்டுள்ளார்.இதனைப் பார்த்த ஜனனி ஒரு கணம் அசலை லுக்கு விட உடனே அவர் கையெடுத்து விட்டார். இந்த வீடியோ தற்போதுஇணையத்தில் வைரலாக பரவி வர நெட்டிசன்கள் பலரும் சம்பந்தப்பட்ட பெண்களே எதுவும் சொல்லவில்லை என்ற கூட்டத்திற்கு ஜனனி ஏன் அப்படி முறைத்தார் என கேள்வி கேட்டு வருகிறார்கள்.