தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் தனது நடிப்பு திறமையால் ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தை வெகுவாக கவர்ந்த நடிகர் நெப்போலியன். இவர் அந்த காலகட்டத்தில் நடிப்பில் கொடிகட்டி பறந்தவர். பல திரைப்படங்களில் ஹீரோவாகவும் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவர் தற்போது வரை வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்தாலும் ஒரு சில படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இவரின் மூத்த மகனான தனுஷ் தனது மூன்று வயதில் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர். அதனால் அப்போதிலிருந்து இப்போது வரை தனது வாழ்க்கையை தனுஷ் வீல்சேரில் தான் கழித்து வருகிறார். சினிமா மற்றும் அரசியல் என நெப்போலியன் பிஸியாக இருந்தாலும் ஒரு பக்கம் தனது மகனை கவனித்துக் கொண்டுதான் வருகிறார்.

இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் தற்போது தனது குடும்பத்துடன் அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் வசித்து வருகின்றார். இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும் தனுஷ் மற்றும் குணால் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். அவரின் மூத்த மகன் தனுசுக்காக அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளார். சிறிது காலம் பிரேக் எடுத்துக் கொண்ட நெப்போலியன் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து சினிமாவில் கலக்கி வருகிறார். தமிழ் சினிமாவை தாண்டி ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் நெப்போலியன் நடித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் தனது மகன் குறித்தும் 23 வருடமாக சாப்ட்வேர் கம்பெனி ஒன்றை நடத்தி வருவது குறித்தும் சுவாரசியமான தகவல்களை நெப்போலியன் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.