தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு ரமணா இயக்கத்தில் வெளியான திரைப்படம் திருமலை. இந்தத் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருப்பார். அந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் திருமலை படத்தின் கதை அஜித்துக்காக எழுதியது என்று படத்தின் இயக்குனர் ரமணா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், அஜித்தை நினைத்து தான் திருமலை படத்தின் கதையை எழுதினேன்.

ஆனால் படத்தின் கதையை அஜித்திடம் சொல்லும் வாய்ப்பு எனக்கு அப்போது கிடைக்கவில்லை. அஜித்துக்கு இடையில் இருப்பவர்களும் எனது கதையை கேட்க தயாராக இல்லை. இடைத்தரகர்கள் என்னுடைய கதையை நிராகரித்து விட்டன. அதன் பிறகு தான் விஜயை வைத்து படமெடுத்தேன்.

படம் வெளியான பிறகு அஜித்தை ஒரு முறை அடையார் பார்க்கில் வைத்து சந்தித்தேன். அப்போது திருமலைக்கதை உங்களுக்காக தான் எழுதினேன் என்று அஜித்திடம் நான் கூறினேன். அதற்கு அவர் பாராட்டினார் என்று முதன் முறையாக இயக்குனர் வெற்றிமாறன் திருமலை படம் குறித்த சுவாரஸ்ய தகவலை அந்த பேட்டியில் பகிர்ந்து உள்ளார். தற்போது அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
#Thirumalai Story Didn't reach to #Ajith sir because of the Mediators.
– Director Ramana#AjithKumar #ThalapathyVijaypic.twitter.com/SsR5IB3vSQ
— Laxmi Kanth (@iammoviebuff007) August 11, 2022