“கொழுகொழுனு இருந்த நான், இப்படித்தான் எடையை குறைத்தேன்”….. நடிகை குஷ்பூ சொன்ன சீக்ரெட்….!!!!

தமிழ் சினிமாவில் 90-களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை  குஷ்பூ. இவரின் படங்கள் அனைத்துமே எப்போதும் ஹிட் கொடுக்கும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களுக்கு தற்போது இருபது வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. சினிமா வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் அரசியலில் களமிறங்கினார் குஷ்பு. பின்னர் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்நிலையில் நடிகை குஷ்பூ தனது உடம்பை குறைத்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

கொழு கொழுவென இருந்த தன்னுடைய அடையாளத்தை குஷ்பூ தற்போது மாற்றியுள்ளார். அதற்குக் காரணம் கொரோனா தொற்று தான் எனவும் குஷ்பூ கூறியுள்ளார். அதாவது கொரோனா காலத்தில் வீட்டில் அதிகமான பொழுதை கழித்ததால் வீட்டின் அனைத்து வேலைகளையும் சோலோவாக செய்ததாகவும்,யோகா மற்றும் மெடிடேஷன் என பொழுதை சிறப்பாக அமைத்துக் கொண்டதாகவும் அதனால்தான் தான் ஒல்லியாக மாற முடிந்தது எனவும் அவர் கூறியுள்ளார். இந்தச் செய்தி ரசிகர்கள் பலரையும் வியக்க வைத்துள்ளது.