தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விக்ரம்.ஒரு திரைப்படத்தின் கதைக்காக எந்த எல்லைக்கும் தன்னை வருத்திக் கொண்டு நடிப்பதில் வல்லவர். அப்படி இவர் நடித்த பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவர் எப்போதுமே ரசிகர்களுடன் ஜாலியாக தான் இருப்பார்.எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் அங்கு மேடையே கலகலத்து விடும். தனது ரசிகர்களுடன் சகஜமாக புகைப்படம் எடுத்துக் கொள்வார்.

இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான கோப்ரா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் ஏழு வித்தியாசமான கெட்டப்களில் நடித்துள்ளார். தற்போது பிரம்மாண்டமாக தயாராகி உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த திரைப்படத்தில் விக்ரம் ஆதித்ய கரிகாலன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியுள்ளார்.

இதனிடையே சென்னை, கேரளா,மும்பை மற்றும் ஹைதராபாத் என படக் குழு படத்தை ப்ரோமோன் செய்து வருகிறது. நடிகர் விக்ரமைபோல அவரின் மகனும் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே விக்ரமின் தந்தை குறித்த ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது நடிகர் விக்ரமின் தந்தை ஒரு நடிகர் தான். இவரின் தந்தை பெயர் வினோத் ராஜ். இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரர்.

இவர் கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். நடிப்பை தாண்டி நடனம் மற்றும் பாடல்கள் பாடுவதில் இவர் சிறந்தவர்.விஜய் நடிப்பில் வெளியான கில்லி மற்றும் திருப்பாச்சி போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள இவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.தற்போது விக்ரம் அவரின் தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
