தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்தான் நடிகர் மகத்.இவர் பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் விஜய் டிவியில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் முதல் முதலில் கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடித்த வல்லவன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

பின்னர் 2007 ஆம் ஆண்டு காலை ஏற்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.பிறகு 2011 ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.அதே சமயம் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இருந்தாலும் இவருக்கென தனி ஒரு புகழை தேடித்தந்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அதன் பிறகு இவருக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது. இந்நிலையில் மகத் தனது தங்கைக்கு வாழ்த்து கூறி ஒரு பதிவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் மகத்திற்கு இவ்வளவு அழகான தங்கையா என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.