அடடே பிக்பாஸ் வீட்டில் இவரா?…. நிகழ்ச்சியே சும்மா அதிர போகுது…. ரசிகர்களுக்கு வெளியான மாஸ் அப்டேட்….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளில் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் மிக விரைவில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. அதற்கான ப்ரோமோ சமீபத்தில் ஒளிபரப்பானது. இந்நிலையில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்திலிருந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

தற்போது ஆறாவது சீசனுக்கும் அவர்தான் தொகுப்பாளராக உள்ளார்.அதனால் எதிர்பார்ப்பு தற்போது மேலும் அதிகரித்துள்ளது.அது மட்டுமல்லாமல் போட்டியாளர்களாக யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.தற்போதைய தகவலின்படி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கின்றன. பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் நடிகர் கூல் சுரேஷ் பங்கேற்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் அனைத்து படங்களையும் உடனே பார்த்து விமர்சனம் செய்து வரும் இவர் ரசிகர்கள் மத்தியில் தற்போது பிரபலமாகியுள்ளார்.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் இவர் இணைந்தால் நிகழ்ச்சியை கட்டாயம் கலை கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.