சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சரவணன் அருள்.தனது சொந்தக் கடையின் விளம்பரத்தில் தானே நடித்து பிரபலமானார்.தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா மற்றும் தமன்னா உள்ளிட்ட முன்னணி நடிகைகளை வைத்து அவர்களுடன் இணைந்து நடித்த விளம்பரம் எடுத்தார். அதனால் பலரும் இவரை கேலி செய்து வந்தனர்.

அதற்கெல்லாம் செவி சாய்க்காத சரவணன் அடுத்த கட்டமாக படங்களின் நடிக்கும் ஆசையை நிறைவேற்றினார். அதன்படி தி லெஜெண்ட் என்ற படத்தில் நடித்தார். ஜேடி ஜெர்ரி இயக்கிய இந்த திரைப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் மறைந்த நடிகர் விவேக், விஜயகுமார்,பிரபு மற்றும் நாசர் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் அருள் அண்ணாச்சிக்கு ஜோடியாக புதுமுகம் கீர்த்திகா திவாரியும் நடித்துள்ளார். கடந்த ஜூலை 28ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பழமொழி படங்களில் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ஓரளவுக்கு வசூல் ஈட்டியது.

இந்நிலையில் தற்போது சரவணன் அருள் தனது இரண்டாவது படத்திற்காக தயாராகி வருகிறார். அந்தப் படத்தில் ரொமான்டிக் ஹீரோவாக நடித்த முடிவெடுத்து சரவணன் அதற்காக கதை கேட்கும் பணியில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த படம் குறித்து அறிவிப்பு தீபாவளிக்கு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
Kick Started to Work after WorkOut
Monday Vibes#TheLegend#LegendSaravanan pic.twitter.com/IEy8m9nqGi— Legend Saravanan (@yoursthelegend) September 19, 2022
இந்நிலையில் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சரவணன் அவ்வபோது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அவ்வகையில் தற்போது ஸ்லிம் ஆன லுக்கில் பார்ப்பதற்கு ஸ்கூல் பையன் போல் இருக்கும் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 50 வயதை கடந்த போதும் கூட இவர் இவ்வளவு இளமையாக இருக்கிறாரே என்று பலரும் கமாண்ட் செய்து வருகிறார்கள்.