தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து கொடிகட்டி பறந்த நடிகர் சிவாஜியின் மகன்தான் நடிகர் . தனது தந்தையைப் போலவே சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் பிரபு. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு,மலையாள மற்றும் கன்னட முள்ளிட்ட பழமொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் இதுவரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தது மட்டும் அல்லாமல் தமிழில் முதல் முறையாக சங்கிலி என்ற திரைப்படத்தின் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். அதனைத் தொடர்ந்து இவர் சின்னத்தம்பி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். வயது முதிர்ந்தாலும் இன்று வரை இவர் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அவ்வகையில் விரைவில் வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் பிரபு ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதனிடையே பிரபு புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விக்ரம் பிரபு என்ற மகனும் ஐஸ்வர்யா என்ற மகளும் உள்ளனர். தந்தையைப் போலவே விக்ரம் பிரபு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். விக்ரம் பிரபுவுக்கு லட்சுமி என்பவரை கடந்த 2007 ஆம் ஆண்டு பிரபு திருமணம் செய்து வைத்தார்.

இதரிடையே விக்ரம் பிரபு தனது மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை எப்போதும் இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் பிரபுவுக்கு இவ்வளவு அழகான மருமகளா என்று கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
