நாய் விளம்பரத்தில் கூட இப்படியா?…. ஓவர் கிளாமர் காட்டிய சமந்தா…. வீடியோவை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்….!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாட்டிற்கு நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பாலிவுட் வரை சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் திடீரென திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவரும் பிரிவதாக கூட்டறிக்கை வெளியிட்டனர்.

அது அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது இருவரும் அவரவர் வேலைகளில் பிஸியாக உள்ளனர். இதனிடையே விவாகரத்திற்கான காரணம் எதையும் கூறாமல் தன் வேலைகளில் கவனம் செலுத்தி வரும் சமந்தா கிளாமரில் ரசிகர்களை வாய்ப்பிழக்க வைத்து தென்னிந்தியாவை தாண்டி பாலிவுட் வரை தற்போது கால் பதித்துள்ளார்.

இந்நிலையில் அண்மையில் நாய் உணவு விளம்பரத்தில் சமந்தா நடித்துள்ளார்.அந்த விளம்பரத்திலும் கூட ரசிகர்களை கவரும் வகையில் கிளாமர் உடையில் கலக்கியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.