விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ராஜா ராணி சீரியல் முதல் வெற்றியை தொடர்ந்து தற்போது வெற்றிகரமாக இரண்டாவது சீசன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் வி.ஜே அர்ச்சனா நடித்து வருகிறார். இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது வழக்கம்.

அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவார். அவ்வகையில் தற்போது முதல் முறையாக தனது சகோதரியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனது சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்தும் தெரிவித்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
