பெற்றோரை மனம் குளிர செய்த…. விஜய் டிவி சீரியல் நடிகை…. என்ன செஞ்சாங்கனு நீங்களே பாருங்க…!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தீபிகா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தொடரில் இருந்து திடீரென விலகினார். அது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவரின் முகத்தில் பரு அதிகமாக இருப்பதால் சீரியலில் இருந்து நீக்கப்பட்டதாக அவரே ஒரு பதிவை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து கலர்ஸ் தமிழில் சில்லுனு ஒரு காதல் என்ற சீரியலில் அவர் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கியுள்ளார். இப்படிப்பட்ட இவரின் பெற்றோர் ஏழ்மையில் வீடு கூட இல்லாமல் தான் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் அந்த குறையைப் போக்க சின்னதாக ஒரு வீட்டைக் கட்டி கொடுத்துள்ளார் தீபிகா. அந்தப் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள நிலையில் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.