சுஹாசினி மணிரத்தினம் தம்பதிக்கு இவ்வளவு பெரிய மகனா?…. தனது மகனுடன் சுஹாசினி எடுத்த புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் எண்பதுகளில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் ஷாருஹாசனின் மகள் சுஹாசினி. இவர் நடிப்பில் வெளியான என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு மற்றும் பாலைவனச்சோலை உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தந்தன. அந்த திரைப்படங்கள் இவரின் வாழ்வில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

திரைத்துறையில் நடிப்பில் தனக்கென தனி முத்திரையை பதித்தவர். அதுமட்டுமல்லாமல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வருகிறார். 80களில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். சினிமாவில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் கடந்த 1988 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சுகாசினி மற்றும் மணிரத்தினம் தம்பதியினருக்கு நந்தன் மணிரத்தினம் என்ற ஒரு மகன் இருக்கிறார். தனது மகனுடன் சுகாசினி எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சுகாசினிக்கு இவ்வளவு பெரிய மகனா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.