காதலியை கரம் பிடித்து அடுத்த நாளே கொட்டிய பணமழை…. பலரையும் வியக்க வைத்த சம்பவம்….!!!!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 26 வயதான ரீஸ் என்ற இளைஞர் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் துபாய்க்கு குடி பெயர்ந்து உள்ளார். அங்கு உடற்பயிற்சி கூடத்தில் வேலை செய்து வந்த இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி தனது காதலியை திருமணம் செய்து கொண்டார். அதற்கு அடுத்த நாள் புகழ்பெற்ற துபாய் Mahzooz டிராவில் அவருக்கு பத்து மில்லியன் டாலர் (கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் 98 கோடி) பரிசு விழுந்துள்ளது. துபாய் டிராவில் பரிசு வென்ற இளம் நபர் என்ற சாதனையையும் இவர் பெற்றுள்ளார். இந்த சம்பவம் இணையத்தில் பரவிய நிலையில் அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.