சமந்தாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா?…. சிகிச்சைக்காக அமெரிக்கா டிரிப்…. கேட்டதும் ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் சமந்தா. தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். புஷ்பா படத்தில் பூ சொல்றியா மாமா என்ற பாட்டிற்கு நடனம் ஆடியதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது பாலிவுட் வரை சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.

தற்போது இவரின் நடிப்பில் யசோதா மற்றும் குஷி ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. சினிமாவைப் போலவே சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வபோது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்வது வழக்கம்.ஆனால் சமீப காலமாக இவரின் எந்த ஒரு புகைப்படம் மற்றும் வீடியோவும் இணையத்தில் வெளியாகவில்லை. இருந்தாலும் இடையே யசோதா படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை மட்டும் அவர் வெளியிட்டார்.

இந்நிலையில் சமந்தாவின் புகைப்படங்கள் வெளியாகாமல் இருப்பதற்கு என்ன காரணம் என்பது குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது சமந்தாவின் முகத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் புகைப்படங்களை அவர் எடுக்காமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே முகத்தில் சில பிரச்சனைகள் வந்த போது அதனை சரி செய்த நிலையில் தற்போது மீண்டும் சமந்தா அதே பிரச்சனையில் சிக்கியுள்ளார். அதனால் விரைவில் சிகிச்சைக்காக சமந்தா அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.