பிரபல நடிகருடன் விஜய்யின் மனைவி சங்கீதா…. கூட யார் இருக்காங்க தெரியுமா?…. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் விஜய். இவர் தற்போது வம்சி  இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா வந்தனா நடிக்கின்றார்.அதுமட்டுமல்லாமல் யோகி பாபு மற்றும் பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ள நிலையில் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.இதனிடையே நடிகர் விஜய் கடந்த 1999 ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர்.இதனிடையே விஜயின் குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம். அவ்வகையில் விஜயின் மனைவி சங்கீதா தற்போது பிரபல நடிகர் பிரபு மற்றும் நடிகர் ராதிகாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரடாகி வருகிறது.