பிக்பாஸ் ராஜு மனைவியா இது?…. அப்படியே பார்க்க ஹீரோயினி போல் இருக்காங்களே…. மனைவியுடன் ஜாலியாக வெளிநாட்டில் சுற்றும் ராஜு….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோகளில் அதிக அளவிலான ரசிகர்களைக் கொண்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் மிக விரைவில் ஆறாவது சீசன் தொடங்க உள்ளது. அதற்கான ப்ரோமோ சமீபத்தில் ஒளிபரப்பானது. இந்நிலையில் தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் ஆரம்பத்திலிருந்து தொகுத்து வழங்கி வருகிறார். தற்போது ஆறாவது சீசனுக்கும் அவர்தான் தொகுப்பாளராக உள்ளார்.

பிக் பாஸ் ஆறாவது சீசன் வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி ஆரம்பமாக உள்ள நிலையில் ரசிகர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமாக போவது யார் என்பதை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். போட்டியாளர்கள் குறித்த தகவல்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகிறது. இருந்தாலும் நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்பது குறித்த தகவல் நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது தான் தெரியவரும்.

கடந்த ஐந்தாவது சீசனில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தான் ராஜூ ஜெயமோகன். பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். இன்னும் சொல்லப்போனால் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.தற்போது இவர் விஜய் டிவியில் ராஜு வூட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் தனது மனைவியுடன் ராஜூ ஸ்காட்லாந்து சென்றுள்ளார். அங்க எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ராஜூவுக்கு இவ்வளவு அழகான மனைவியா பார்க்க ஹீரோயினி போல் இருக்காங்களே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.