நவராத்திரி ஸ்பெஷல் லுக்…. பாவாடை தாவணியில் கலக்கும் அதிதி சங்கர்…. போட்டோவை பார்த்து மயங்கிய ரசிகர்கள்….!!!!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் விருமன். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் முதன் முறையாக ஹீரோயினியாக களமிறங்கியுள்ளார். இப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் இப்படத்தில் ஒரு பாடலையும் அதிதி சங்கர் பாடியுள்ளார்.

முதல்முறையாக ஹீரோயினியாக அறிமுகமான படத்திலேயே மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளார் அதிதி சங்கர். இதனால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.அவ்வகையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அதிதி சங்கர் தற்போது நவராத்திரி ஸ்பெஷல் ஆக ஹோம்லி லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். பாவாடை தாவணியில் அவர் எடுத்திருக்கும் போட்டோ சூட் தற்போது இதயத்தில் வைரலாகி வருகின்றது.