
சரவணா ஸ்டோர் தொழிலதிபரான அருள் சரவணன் நடித்த தி லெஜண்ட் திரைப்படம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2,500 திரையரங்குகளில் வெளியானது.அப்படத்தில் அருள் சரவணன் மனைவியாக கீர்த்திகா திவாரி என்பவர் நடித்திருந்தார்.
மேலும் அவரின் காதலியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டாலா என்பவர் நடித்திருந்தார். இவர் பாலிவுட்டில் பிரபலம் என்பதால் இவருக்கு மிகப்பெரிய சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தமிழ் திரை உலகில் மிக அதிகமாக ஒரு திரைப்படத்திற்கு 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நயன்தாராவை மிஞ்சும் அளவிற்கு நான்கு மடங்கு அதாவது 20 கோடி ரூபாய் சம்பளம்,
தி லெஜன்ட் படத்திற்காக ஊர்வசி ரௌட்டாலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அளவு சம்பளத்திற்கு தமிழில் அவர் நடித்த முதல் படம் இதுதான். இந்தச் செய்தி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.